UAE Tamil Web

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் துவங்கும் தேதியை அறிவித்தது DFRE..!

DSF

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் -ன் 27 வது சீசன் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்ட வான வேடிக்கைகள், வாழ்க்கையை மற்றும் ரேஃபிள் டிராக்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், சமூக சந்தை என இந்தவருட துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மக்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டை வைக்க இருக்கிறது.

டிசம்பர் 15, 2021 அன்று துவங்கும் இந்த பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழா, ஜனவரி, 29, 2022 ஆம் தேதி வரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் சில்லறை வர்த்தக ஸ்தாபனம் (DFRE) இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. இதுகுறித்துப் பேசிய DFRE -ன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். அகமது அல் காஜா,” அமீரகத்தின் பொன்விழா ஆண்டில் அதுவும் பிரம்மாண்ட எக்ஸ்போ 2020 நடைபெறும் இந்நேரத்தில் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் துவங்க இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்” என்றார்.

இந்த வருட ஃபெஸ்டிவலில் புர்ஜ் பார்க்கில் உள்ள OTB மற்றும் அல் சீஃப்-ல் உள்ள DSF மார்கெட் ஆகியவை மீண்டும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

DSF
3 Shares
Share via
Copy link