துபாயில் இருக்கும் ஷோரூம் ஒன்று வாடகைக்கு விடப்படுவதாக கூறப்பட்டு அதற்கான முழு தொகையை கோடிக்கணக்கில் ஆட்டைய போட்ட கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
துபாயில் தொழிலதிபராக இருப்பவர் 65 வயதாகும் அப்துல் லஹிர் ஹசன். பிரிகேட் சாலையில் உள்ள காலணி ஷோரூமினை விற்பதாக ஒரு கும்பல் இவரை நாடி இருக்கிறது. பெரிய தொழிலதிபராக இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பி இருக்கிறார். 2 கோடி ஷோரூமில் இருந்து மாதா மாதம் 4 லட்சம் வரை வருமானம் வரும் எனக் கூறியதை நம்பிய அப்துல் அவர்கள் வலையில் விழுந்து இருக்கிறார்.
இந்த கும்பலின் தலைவனாக செயல்படும் முகமது ஹபீஸ் என்பவர், 2019ஆம் ஆண்டு நவம்பரில் அப்துல் லஹிரை தொடர்பு கொண்டான். ஷோரூமில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஷோரூமின் உரிமையாளர் உம்ரியன் நபில் தான். அவர் ஷோரூமை ரூ. 2 கோடிக்கு விற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
ஷோரூமுக்கு ஒவ்வொரு மாதமும் வாடகையாக மட்டுமே ரூ. 4 லட்சம் வரும் என்று கூறியதை அப்துல் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். உடனே ஷோரூமை வாங்க திட்டமிட்ட அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தை எடுத்து இருக்கிறார். உடனே அந்த கும்பலின் முக்கிய நபராக கருதப்பட்ட உமர் ஃபரூக்கின் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
டீலை முடித்த அப்துல் துபாயிற்கு திரும்பி இருக்கிறார். வாங்கிய ஷோரூமை நேரில் பார்க்க சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அந்த ஷோரூமே உம்ரியன் நபில் என்பவருடைய அல்ல என்றும், கொடுக்கப்பட்ட ஆவணங்கள் எல்லாம் போலி என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியாகி இருக்கிறார். இதை தொடர்ந்து குறிப்பிட்ட கும்பலையுமே தொடர்பு கொள்ள முடியாமல் போக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கிறார்.
உடனே யோசிக்காமல் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்து இருக்கிறார். தற்போது இந்த வழக்கில் ஏமாற்றியவர்கள் மீது சைபர் கிரைம் மற்றும் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.