UAE Tamil Web

கொரோனா விதிமுறை மீறல்: 23 சலூன்களை இழுத்து மூடிய துபாய் நகராட்சி..!

Shop-closed_

ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் விடுமுறைகளில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறிய 26 சலூன்களை மூடியுள்ளதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 13 – மே 15 வரையில் துபாய் முழுவதிலும் உள்ள சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களில் 692 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் மூலமாக 96 சதவித சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பான முறையில் பின்பற்றுவது தெரியவந்ததாக நகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துபாய் நகராட்சி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் விடுமுறையின்போது சமூக மக்கள் அனைவரின் நலத்தினை காக்கும் பொருட்டு துபாயில் முழுவதும் உள்ள சலூன்கள், அழகு மற்றும் ஸ்பா செண்டர்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? என்பதை அறிய துபாய் நகராட்சி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.