UAE Tamil Web

புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்…? – அப்படியென்றால் முதலில் இதைச் செய்யுங்கள்..!

smoking

புகைப்பிடிக்கும் நபர்களுக்கு கொரோனா தொற்று எளிதில் ஏற்படும் என உலக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அவர்களுக்கு (புகைப்பிடிப்பவர்கள்) அறிகுறிகள் ஏதும் இல்லையென்றாலும் விரைவில் அவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது நலம் என துபாயைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அதாவது எவ்வளவு துரிதமாக முடியுமோ அத்தனை வேகத்தில் புகைப் பிடிப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

துபாய் சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் ரஷீத் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவின் தலைவரும் நுரையீரல் நிபுணருமான டாக்டர்.பாஸாம் மஹ்போப்,” புகைப்பிடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்து தற்போது உங்களுக்கு எவ்வித அறிகுறியும் தெரியவில்லை என்றால் உங்களுடைய நுரையீரல் பாதிப்படையவில்லை என்று அர்த்தமில்லை. அதேபோல எதிர்காலத்திலும் நுரையீரல் பாதிப்படையாது என்று கூற முடியாது. ஆகவே தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து உங்களைக் காக்கும்” என்றார்.

அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் கடந்தவாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” புகைப்பிடிப்பவர்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானால் கடுமையான உடல்நல பாதிப்பிற்கு உள்ளாவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

smoking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap