மனிதனின் கனவுகள் எல்லாமே நனவாகும் இந்த உலகில், தற்போது நமது துபாயில் விரைவில் பறக்கும் டாக்சிகள் வரவுள்ளன. பல அதிசய கட்டிடங்களுக்கும் நேர்த்தியான விஞ்ஞானத்திற்கும் பெயர் பெற்ற நமது அமீரகத்தில் விரைவில் இந்த சேவை வரவுள்ளது.
பிரேசிலிய திட்ட தயாரிப்பாளரான Embraerக்கு சொந்தமான மின்சார விமான நிறுவனமான Eve மற்றும் அமீரகத்தை தளமாகக் கொண்ட சார்ட்டர் ஃப்ளைட் ஆபரேட்டரான Falcon Aviation சேவை ஆகியவை இணைந்து துபாயில் 35 பறக்கும் டாக்சிகள் மற்றும் நகர்ப்புற விமான இயக்கத் திட்டங்களை உருவாக்கி வருகின்றன.
வரும் 2026ம் ஆண்டு வாக்கில் இந்த சேவைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, Falcon நிறுவன அறிவிப்பின்படி ஈவ் மற்றும் ஃபால்கன் நிறுவனங்கள் இரண்டும், உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து இந்த சேவையை வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளது.
குறுகிய பயண இடங்களுக்கு செல்ல ஒரு மாற்றத்தைக் கொண்டுவர பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் பருவநிலை மாற்றத்துக்கு தகுந்தாற்போலவும் இது செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் செயல்படுத்தப்படும் முதல் eVTOL (electric vertical take-off and lift) விமானங்கள் இதுவென்பதையும் Falcon நிறுவனம் தெரிவித்துள்ளது. Volocopter என்பது உலகின் முதல் மின்சாரம் மற்றும் மனிதர்களைக் கொண்ட செயல்படுத்தப்படும் விமானமாகும்.
Drone தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த வாகனத்தின் ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் ரோபோக்கள் இதன் Batteryகளை மாற்றும். Zero Sound தொழில்நுட்பத்தில் இந்த volocopter இயங்குகின்றது.