UAE Tamil Web

உடல் தான் பிரச்சனை.. மனசில்ல..கேன்சர், கொரோனாவையும் கடந்து பொதுத்தேர்வில் 97% மதிப்பெண்கள் பெற்ற துபாய் மாணவர்!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. அமீரகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் 100% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த நிலையில் துபாயைச் சேர்ந்த பிபின் பல்தேவ் ராஜ் தற்போது லைம் லைட்டிற்கு வந்துள்ளார். துபாயில் உள்ள Gems our own Indian Schoolல் 12ம் வகுப்பு படித்து முடித்தவர் பிபின் பால்தேவ். எலும்புகளை தாக்கும் அரிய வகை புற்றுநோயை (Stage 4) எதிர்த்து போராடி வரும் இவர், கொரோனா பேரிடரையும் பாதுகாப்பாக சமாளித்து வென்றுள்ளார். புற்றுநோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டே புத்தகங்களை புரட்டிய பிபின், விடா முயற்சியுடன் கல்வி பயில்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். அண்மையில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் பிபின் 97.2% மதிப்பெண்கள் பெற்றது அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பது சக மாணவர்களுடன் தொடர்பில் இருப்பது என அனைத்திலும் பிபின் சிறந்து விளங்கியுள்ளார். பிபினின் அறையை கடந்து செல்லும் போதெல்லாம் அவர் புத்தகமும் கையுமாகவே இருப்பார் என்றும் சிகிச்சைக்குப் பின்னர் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் ஆர்வத்துடன் கல்வி பயிலும் கெட்டிக்காரர் எனவும் பாராட்டியுள்ளது அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை. உயிருக்குப் போராடும் தருணங்களிலும் மனம் தளராது பிறருக்கு எனர்ஜி டானிக்காக இருக்கும் பிபின் எதிர்காலத்தில் வழக்கறிஞராவதே லட்சியமாக கொண்டுள்ளார்..

விரைவில் புற்றுநோயை வென்று நீதியை நிலைநாட்டும் தலைசிறந்த வழக்கறிஞராக வாருங்கள் பிபின்..

2 Shares
Share via
Copy link
Powered by Social Snap