39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

நாளை துவங்க இருக்கும் துபாய் சம்மர் சர்ப்ரைஸ் – நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகள்..!

dubai

நாளை முதல் (வியாழக்கிழமை) துபாயின் மிகப்பெரிய விற்பனைத் திருவிழாவான சம்மர் சர்ப்ரைஸ் (DSS – Dubai Summer Surprises) துவங்க இருக்கிறது. ஒவ்வொரு கோடைகாலத்திலும் நடைபெறும் இந்த விசேஷ விற்பனை கொண்டாட்டமானது ஏழு வாரங்களுக்கு நீடிக்கும்.

இந்த 23 வது சம்மர் சர்ப்ரைஸ் திருவிழாவில் வான வேடிக்கைகள், பிரம்மாண்ட ரேஃபில் டிரா, புர்ஜ் கலீஃபாவின் மீது யோகா செய்யும் வாய்ப்பு என மக்களுக்கு பல சிறப்பு நிகழ்ச்சிகளை அளித்திருக்கிறது துபாய் திருவிழா மற்றும் சில்லறை ஸ்தாபன அமைப்பு (DFRE).

“ஒவ்வொரு வருடமும் தனது பிரத்யேக விற்பனை, ப்ரோமோஷன், ரேஃபில் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் ஷாப்பிங் செய்பவர்களை குதூகலப்படுத்திவருகிறது சம்மர் சர்ப்ரைஸ். துபாய் குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டிங் விசாவில் வந்தவர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் இந்த சம்மர் சர்ப்ரைஸ் திருவிழாவானது துபாயின் நாட்காட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திருவிழாவாக மாறியுள்ளது” என DFRE வின் தலைமை நிர்வாக இயக்குனரான அகமது அல் காஜா (Ahmed Al Khaja) தெரிவித்தார்.

இந்த வருட சம்மர் சர்ப்ரைஸ் திருவிழாவானது இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அகமது தெரிவித்தார்.

துபாய் மக்கள், விசிட்டிங் விசாவில் வந்தவர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு  மிகச்சிறந்த அனுபவத்தைத் தர இருக்கிறது இந்த வருட சம்மர் சர்ப்ரைஸ் – அகமது.

கேளிக்கைகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருந்தாலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட சம்மர் சர்ப்ரைஸ் திருவிழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள்:

புர்ஜ் கலீஃபாவில் யோகா

புர்ஜ் கலீஃபாவின் பார்வையிடும் பகுதியில் யோகா செய்யும் வாய்ப்பு உடற்பயிற்சி விரும்பிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிக உயரமான கட்டிடத்திலிருந்து சுற்றுப்புறத்தை கண்டுகளித்தவாறே விருந்தினர்கள் யோகா செய்யலாம்.

வாரத்திற்கு 3 முறை இங்கே யோகா செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவர். DSS நடைபெற இருக்கும் 7 வாரத்திற்கு மொத்தம் 21 முறை இங்கே யோகா நிகழ்ச்சியானது நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் காலை 7 மணிக்கே புர்ஜ் கலீஃபாவிற்கு வந்துவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த திரையரங்கையும் முன்பதிவு செய்தல்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே அமர்ந்து படம் பார்க்கும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த குட்டி தியேட்டரில் 10 நபர் அமரலாம். எமிரேட்ஸ் மால், சிட்டி சென்டர் தேரா மற்றும் சிட்டி சென்டர் மிர்திப் ஆகியவற்றில் உள்ள VOX திரையரங்கங்களில் இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது. நபர் ஒருவருக்கு வழக்கமாக 450 திர்ஹம்ஸ் கட்டணமும், சிறப்பு திரையிடலுக்கு (Gold) நபர் ஒருவருக்கு 800 திர்ஹம்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mall
Image Credit : khaleejtimes

கண்கவர் வான வேடிக்கை

பாம் ஜூமைராவில் (Palm Jumeirah) அமைந்துள்ள வெளிப்புற உணவகங்களில் அமர்ந்து தங்களுக்கு பிடித்த உணவை தள்ளுபடி விலையில் சுவைத்தவாறே வான வேடிக்கைகளை மக்கள் காணலாம்.

ஜூலை 16 -18 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணியளவில் இந்த கண்கவர் வான வேடிக்கை நிகழ்த்தப்படும். ஜூலை 12 முதல் ஜூலை 18 வரையிலான நாட்களில் இங்கே உணவுகளுக்கு பிரத்யேக தள்ளுபடியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fire works
Image Credit : khaleejtimes

கொரோனாவை ஷாப்பிங் செய்து கட்டுப்படுத்தலாம்..

கொரோனாவிற்கு எதிரான அமீரகத்தின் போரில் அமீரகத்தின் கரங்களை வலுப்படுத்த மக்களுக்கு வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. ஜூலை 9 முதல் ஜூலை 29 ஆம் தேதிவரையில் மெர்காடோ மாலில் (Mercato Mall) ஷாப்பிங் செய்யப்படும் ஒவ்வொரு 100 திர்ஹம்ஸ்க்கும் 1 திர்ஹம்ஸ் UAE ஹோம்லேண்ட் ஆஃப் ஹியுமனிடி பிரச்சாரத்திற்கு (UAE Homeland of Humanity campaign) அளிக்கப்படுகிறது.

இந்த பிரச்சாரத்தினை, அமீரக ரெட் கிரசன்ட் (Emirates Red Crescent) மற்றும் இஸ்லாமிய விவகாரத்துறை மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை ஆதரிக்கின்றன. இந்த மாலில் 100 திர்ஹம்ஸ்க்கு ஷாப்பிங் செய்யும் மக்களுக்கு 1000 திர்ஹம்ஸ் வரையிலான பரிசுத்தொகையை வெல்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

90 சதவிதம் வரையிலான தள்ளுபடி!

ஜூலை 9 ஆம் தேதி முதல் காலை 10 மணிக்குத் துவங்கும் இந்த விற்பனைத் திருவிழா இரவு 10 மணி வரை என மொத்தம் ஒரு நாளுக்கு 12 மணிநேரம் தொடர இருக்கிறது. பல்வேறு வகையான பொருட்களுக்கு 25 முதல் 90 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்களில் 300 திர்ஹம்ஸ் செலவழிக்கும் நபர்கள் 1 மில்லியன் ஷேர் பாயின்ட்ஸ்-ற்கான டிரா -உடன், 12 மணிநேர ஷேர் ரேஃபிலுக்குள் நுழைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

discounts
Image Credit : khaleejtimes

இந்த வருட DSS ல் மால்களில் “ஒருநாள் மட்டும்” என்ற சிறப்பு விற்பனைத் திட்டம் பெரிய கடைகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்புகள் 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள்

துபாயின் பிரபல மால்களில் அனைத்து வயது குழந்தைகளுக்கான நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates), சிட்டி சென்டர் தேரா (City Centre Deira), சிட்டி சென்டர் மிர்திஃப் (City Centre Mirdif), துபாய் அவுட்லெட் மால் (Dubai Outlet Mall), நக்கீல் மால் (Nakheel Mall), இப்னு பதூதா மால் (Ibn Battuta Mall) மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி (Dubai Festival City) ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் பிரபல உணவுகளை தயாரித்தல்

DSS ஷெஃப் மாஸ்டர்கிளாஸ் (DSS Chef Masterclass) என்னும் தொடரின் மூலம் துபாயின் சிறந்த சமையல்காரர்களிடமிருந்து துபாயின் பிரபல உணவுகளை சமைக்கும் முறைகளைக் கற்றுக்கொள்ளலாம். இந்த தொடர் மொத்தம் 10 வகுப்புகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு தங்குமிடங்கள்

இந்த வருட DSS நடைபெறும் நாட்களில், மிகக்குறைந்த விலையில் தங்கும் அறைகளை அளிப்பதாக பல சொகுசு விடுதிகள் அறிவித்துள்ளன. இந்த விடுதிகளுக்கு வரும் மக்களுக்கு உணவு & பானம் (F&B packages), ஸ்பா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறந்த அனுபவங்களையும் சலுகை விலையில் அளிக்க இருக்கிறது இந்த சொகுசு விடுதிகள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!