UAE Tamil Web

துபாய் சம்மர் சர்ப்ரைஸ் திருவிழா: வாரம் ஒரு பென்ஸ் கார் & 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வெல்ல அரிய வாய்ப்பு..!

BENZ

ஜூலை 1 ஆம் தேதி துவங்கிய துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS) திருவிழா கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ANOC குழுமம் புதிய ரேஃபிள் டிரா ஒன்றினை அறிவித்துள்ளது. இதன்மூலம் புத்தம்புதிய மெர்சிடஸ் பென்ஸ் C200 கார் மற்றும் 25 ஆயிரம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வெல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

துபாய் சம்மர் சர்ப்ரைஸ்-ன் இந்த மெகா ரேஃபிள் டிராவில் பங்கேற்க 150 திர்ஹம்ஸ் மதிப்புள்ள டிக்கெட்டை நீங்கள் வாங்கவேண்டும். வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படுவார்கள்.

ENOC குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் ஹுமைத் அல் ஃபலாசி இதுகுறித்துப் பேசுகையில்,” துபாய் திருவிழா மற்றும் சில்லறை வர்த்தகத்திற்கான ஸ்தாபனம் (DFRE) நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நாங்கள் பங்குதாரராக இருக்கிறோம். கோடைக்காலத்தை பயனுள்ள வகையிலும் தள்ளுபடியுடனும் மக்கள் கழிக்க DSS பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது” என்றார்.

BENZ
0 Shares
Share via
Copy link