துபாயில் வசித்து வருபவர் அன்வர் அலி. இவர் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து திருச்சி வந்த அன்வர் அலி, கும்பகோணத்தில் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட சிறுவர்களை, அருகில் உள்ள ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றார்.
அதைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கு தேவையான புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்தார். குறிப்பாக, மாணவர்கள் தேர்ந்தெடுக்க ஆடைகளையே வாங்கிக் கொடுத்துள்ளார்.
தற்போது, இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நிலையில், வரும் மே 2-ஆம் தேதி அன்று பெருநாள் 9ரம்ஜன)பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. அதனால், ஆதரவற்ற இல்லத்தில் உள்ள மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுத்ததாக அன்வர் அலி தெரிவித்தார்.
இதனியடுத்து சிறுவர்களுடன் ஒரு குழுவாக புகைப்படத்தையும் அன்வர் அலி எடுத்துக் கொண்டார்.
இந்த புகப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் அனைவரும் அன்வர் அலியின் மனிதாபிமான செயலை பாராட்டி வருகின்றன.