UAE Tamil Web

தீபாவளியன்று அமீரகத்தில் நடைபெறவுள்ள வானவேடிக்கைகள் – எங்கே..? எப்போது..?

fire works

இந்தியர்கள் அதிகம் பணிபுரியும் நாடுகளில் ஒன்றான அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படுவது வழக்கம். தீப ஒளித் திருநாளான தீபவளியன்று அமீரகமே வான வேடிக்கைகைகளால் களைகட்ட இருக்கிறது. எங்கே? எப்போது எனக் கீழே காண்போம்.

  • வரும் அக்டோபர் 29 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு ஜுமேயரா கடற்கரையில் வானவேடிக்கை நடைபெற இருக்கிறது.
  • துபாய் மெரீனா மற்றும் சிட்டி ஸ்கைலைனின் சில இடங்களிலும் வானவேடிக்கைகள் நடைபெற இருக்கிறது. ப்ளூவாட்டர்ஸ் ஃபயர்வொர்க்ஸ் என்றழைக்கப்படும் இந்தப் பிரபல வானவேடிக்கை தீபாவளியன்று அதாவது நவம்பர் 4 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நடைபெற உள்ளது.
  • துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலின் ஃபெஸ்டிவல் பே பகுதியில் நவம்பர் 4 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு வாணவேடிக்கைகள் நடைபெற உள்ளன. உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் பிடித்த உணவுகளை ருசித்துக்கொண்டே இந்த வானவேடிக்கையை நீங்கள் கண்டுகளிக்கலாம்.
  • புகழ்பெற்ற க்ளோபல் வில்லேஜில் அக்டோபர்  26 முதல் நவம்பர் 13 ஆம் தேதிகளுக்கிடையே ஒவ்வொரு ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு வாணவேடிக்கைகள் நடைபெற இருக்கின்றன.

ஆகவே, இந்தத் தீபாவளியை மேற்கண்ட இடத்தில் நடைபெற இருக்கும் வான வேடிக்கைகளுடன் கொண்டாடுங்கள் மக்களே..

fire works
10 Shares
Share via
Copy link