தீபாவளி வந்தாச்சு.. பெருமளவில் இந்தியர்களைக் கொண்டிருக்கும் அமீரகம் தீபாவளியை பரிசுகள், வாணவேடிக்கைகள் என ஒவ்வொரு ஆண்டும் அட்டகாசமான முறையில் கொண்டாடிவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு ஆஃபர்களை வாரி வழங்க இருக்கிறது துபாயில் உள்ள பிரபல கடைகள் மற்றும் மால்கள்.
துபாய் சில்லறை வர்த்தக ஸ்தாபனம் (DFRE) இந்த தீபாவளி சிறப்பு விற்பனை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது. அதன்படி இந்த வருடம் உங்களுக்குக் கிடைக்கும் சிறப்பு தள்ளுபடி குறித்து கீழே விரிவாகக் காணலாம்.
கோல்டன் தீபாவளி சர்ப்ரைஸ் (Golden Diwali Surprises)
DFRE மற்றும் துபாய் ஷாப்பிங் மால்ஸ் க்ரூப் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் பங்கேற்கும் ஷாப்பிங் மால்களில் 200 திர்ஹம்ஸ் செலவிட்டால் உங்களுக்கு டிஜிட்டல் ரேஃபிள் கூப்பன் ஒன்று வழங்கப்படும். இந்த ரேஃபிள் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளருக்கு 100,000 திர்ஹம்ஸ் மதிப்பிலான தங்கம் வெல்லவோ ஷாப்பிங் செய்யவோ வாய்ப்பு கிடைக்கும்.
சிட்டி ஆஃப் கோல்ட் தீபாவளி ஷோ (City of Gold Diwali Glow)
இந்தத் திட்டத்தில் 125 நகை விற்பனை நிறுவனங்கள் சங்கமிக்கின்றன. அக்டோபர் 21 ஆம் தேதி துவங்கிய இந்த தள்ளுபடித் திட்டத்தில் 150,000 திர்ஹம்ஸ் மதிப்பிலான வவுச்சர்கள், நீங்கள் வாங்கும் நகைகளின் விலையில் 50% தள்ளுபடி போன்ற அட்டகாசமான ஆஃபர்கள் உங்களுக்குக் கிடைக்கும். இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு www.dubaicityofgold.com என்ற இணைய பக்கத்தைப் பார்வையிடவும்.
கிஃப்ட் கார்டு
ஜெபல் அலியில் உள்ள ஃபெஸ்டிவல் பிளாசா உங்களுக்கு ஃபெஸ்டிவல் சிட்டி மால்ஸ் கிஃப்ட் கார்டை (Festival City Malls Gift Card) பரிசாக அளிக்க இருக்கிறது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 ஆம் தேதிவரையிலான நாட்களில் ஃபெஸ்டிவல் ரிவார்ட்ஸ் (Festival Rewards) அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோடு செய்திருந்தால் போதும். உங்களுக்கு இந்த கிஃப்ட் கார்டு வழங்கப்படும்.
கார் பரிசு
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் அக்டோபர் 21 – நவம்பர் 13 வரையில் 300 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவுசெய்யும் நபர்கள் Honda Accord EX Turbo 2021 கார் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
சிட்டி செண்டர் தேரா
அக்டோபர் 28 – நவம்பர் 6 ஆம் தேதி வரையில் சிட்டி செண்டர் தேராவில் 200 திர்ஹம்ஸ் செலவிடுபவர்கள் ஜவ்ஹாராவிலிருந்து நெக்லஸ் அல்லது 100,000 SHARE பாய்ண்டுகளைப் பெற முடியும்.
சிட்டி செண்டர் அல் ஷிண்டாகா
சில்லறைக் கடைகளில் 100 திர்ஹம்ஸ் அல்லது கேரிஃபோரில் 200 திர்ஹம்ஸ் செலவிடும் நபர்களுக்கு சிட்ரோன் கார் (Citroen) வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
ஜுமேயரா லேக்ஸ் டவர்
ஜுமேயரா லேக்ஸ் பகுதியில் அமைந்துள்ள வைப்ரன்ட் இந்தியன் ரெஸ்டாரன்ட், காவு காலி ஆகிய உணவகங்களில் அக்டோபர் 22, 23 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் 10 மணிவரையில் பல்வேறு விதமான உணவுப் பொருட்களை நீங்கள் ருசிபார்க்கலாம். தீபாவளி பஜாரில் உங்களுக்குத் தேவையான பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்குவதோடு பல உற்சாகமான விளையாட்டுப் போட்டிகளிலும் நீங்கள் ஈடுபடலாம்.
தீபாவளியை முன்னிட்டு சொமேட்டோ நிறுவனமும் பல புதிய உணவுப் பொருட்களை டெலிவரி செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
