UAE Tamil Web

துபாயில் பிளாஸ்டிக் பைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை எவ்வளவு தெரியுமா..?

துபாயில் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு 25 ஃபில்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிர்வாக கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஜூலை 1 முதல் துபாயில் உள்ள அனைத்து கடைகளிலும் ஒன் யூஸ் பிளாஸ்டிக் பைகளுக்கு 25 ஃபில்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிர்வாக கவுன்சில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.

இது குறித்து அப்பதிவில் “சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் இ-காமர்ஸ் டெலிவரிகள் போன்ற தொழில் புரியும் நிறுவங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பைகள் குறித்து விழுப்புணர்வு பெறுவதோடு, அதன் உபயோகத்தை குறைக்க வேண்டும்” என்று நிர்வாக கவுன்சில் தெரிவித்துள்ளது.

2 Shares
Share via
Copy link