UAE Tamil Web

துபாய்: பேருந்துகளில் 80% மக்களை அனுமதிக்கலாம் – RTA அறிவிப்பு..!

RTA-bus-

துபாயில் உள்ள பொதுப் பேருந்துகளில் செப்டம்பர் 1 ஆம் தேதிமுதல் 80 சதவீத மக்களை அனுமதிக்கலாம் என துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் அரசால் தளர்த்தப்படுவது கருதியும் எதிர்வரும் எக்ஸ்போ 2020 ஐ முன்னிட்டும் துபாய் பொதுப் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகள் எண்ணிகையை 80 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் துபாய் எக்ஸ்போவிற்காக வாங்கியவை மற்றும் தேவை அதிகரிக்கும் போது பயன்படுத்துவதற்காக பயன்படுத்த வாங்கியவை என மொத்தம் 1698 பேருந்துகளுடன் RTA இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

RTA-bus-
0 Shares
Share via
Copy link