UAE Tamil Web

உலகின் மிகப்பெரிய ராட்டினம் – துபாயில் அக்டோபர் 21ல் திறப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் புளு வாட்டர்ஸ் தீவில் கட்டுப்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய ராட்டினம் வரும் அக்டோபர் 21ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புளு வாட்டர்ஸ் தீவில் 250 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ராட்டினத்திற்கு ‘ஐன் துபாய்’ (Ain Dubai) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஐ ராட்டினத்தை விட இது 2 மடங்கு பெரியது. ஐன் துபாய் ராட்டினத்தில் ஒரு தடவை சுற்றிவர மட்டுமே 38 நிமிடங்கள் ஆகும். அத்துடன் இந்த ராட்டினத்தில் குளிர்சாதன வசதியுடன் 48 கேபின்கள் உள்ளன.

Everything you need know to about Ain Dubai on Bluewaters Dubai | Things To  Do | Time Out Dubai

ஒருமுறை சுமார் 1,750 பயணிகள் ராட்டினத்தில் சுற்றி வரலாம். சிறப்பு கேபின்கள் இரண்டு டபுள் டெக்கர் பேருந்துகளை விட பெரியது என கூறப்படுகிறது. உலகின் மிக உயரமான கோபுரம் என புர்ஜ் கலீஃபா பெயர் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த ராட்டினம் மூலம் துபாய்க்கு மேலும் ஒரு உலகப் புகழ் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு ராட்டினம் திறக்கப்பட இருக்கிறது.

2 Shares
Share via
Copy link