பராமரிப்பற்று கைவிடப்பட்ட கார்கள் குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் முக்கிய அறிவிப்பு..!

Dubai to send warning SMS to owners of abandoned cars

துபாய் நகரத்தில் பராமரிப்பற்ற முறையில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவதற்கான நடைமுறைகளை மாற்றியுள்ளதாக துபாய் முனிசிபாலிடி அறிவித்துள்ளது.

இது குறித்து துபாய் முனிசிபாலிடி தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் படி, பராமரிப்பற்று கைவிடப்பட்ட வாகனத்தின் பதிவு பெற்ற உரிமையாளருக்கு முதலில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பின்னர் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்கு முன்னர் வாகனம் எடுக்கப்படவில்லை என்றால், அந்த வாகனத்தை துபாய் நகராட்சி அகற்றும் என்று தெரிவித்துள்ளது.

துபாய் நகரின் எழில்மிகு அழகைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நகரவாசிகள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான உரிமைகளை வழங்குவதற்கும், மேலும் மதிப்பதற்கும் இந்த வழிமுறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...