UAE Tamil Web

கைது செய்யச் சென்ற காவல்துறையினர் முன்னிலையில் ஆடையைக் கழற்றிய சுற்றுலாப் பயணி – ஆடிப்போன அதிகாரிகள்..!

Stock-Dubai-Police

துபாயில் உள்ள ஹோட்டல் நிர்வாகத்திடம் தரக்குறைவாக நடந்துகொண்ட ஐரோப்பியாவைச் சேர்ந்த ஆண் சுற்றுலாப் பயணியை கைதுசெய்யச் சென்ற இடத்தில் பயணி ஆடைகளை கழற்றிவிட்டு நின்றதால் அதிகாரிகள் அதிர்ச்சியாகினர்.

அடிக்கடி தங்களது ஹோட்டலுக்கு வந்து தொந்தரவு செய்யும் 60 வயது பயணியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹோட்டல் நிர்வாகம் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறது.

உடனேயே ஹோட்டலுக்கு இரண்டு அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது ஹோட்டல் லாபியில் உள்ள சோஃபாவில் பயணி தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். அதிகாரிகள் அவரை எழுப்பி நடந்தவை குறித்து விசாரித்திருக்கிறார். தனக்கு அசதியாக இருந்ததால் சோஃபாவில் படுக்க அனுமதியளிக்குமாறு ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டதாக பயணி தெரிவித்திருக்கிறார்.

ஓய்வெடுக்க விரும்பினால் ஹோட்டலில் அறை எடுத்து தங்குமாறும் இல்லையேல் வெளியே செல்லுமாறும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடன்படவில்லை என்றால் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் எனவும் அதிகாரிகள் அவரை எச்சரித்துள்ளனர்.

இதனால் ஆத்தரமடைந்த பயணி எழுந்து நின்று தனது ஆடைகளை கழற்றத் துவங்கியிருக்கிறார். அவரது அண்டர்வேர் தவிர அனைத்திற்கும் விடுதலை அளித்தபிறகு அதிகாரிகளை வசைபாடியிருக்கிறார். கைதுசெய்ய முயற்சித்தபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

வெளியே ஓடியவர் வேண்டுமென்றே போலீஸ் கார்மீது மோதி தனது தலையில் தானே காயத்தை உண்டாக்கியிருக்கிறார். உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் பயணி பிடிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் வந்தபிறகு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Stock-Dubai-Police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap