UAE Tamil Web

சுற்றுலா விசாக்களில் அமீரகம் வருவோருக்கு ICA, GDRFA ஒப்புதல் தேவையில்லை – புதிய விதிமுறைகள் வெளியீடு..!

Stock-Emirates-airlines-aircraft_

இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் அமீரகம் வருவோருக்கான புதிய பயண விதிமுறைகளை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 30 (நேற்று) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்த புதிய பயண விதிமுறைகள் குறித்துக் கீழே காண்போம்.

அமீரக அரசால் வழங்கப்பட்ட அனைத்து வகையான விசா/நுழைவு அனுமதி வைத்திருப்பவர்களும் துபாய்க்கு வரலாம். அங்கீகரிக்கப்பட்ட விசா வகைகள்: வேலைக்கான விசா, குறுகிய அல்லது நெடுநாள் தங்கும் விசா, விசிட் மற்றும் புதிதாக வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் விசா.

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் துபாய் வருவோர் கவனத்திற்கு:

சுற்றுலா விசாவில் நீங்கள் எங்கிருந்து துபாய் வருகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுடைய விசா பெறும் விதமும் மாறும். வருகையின் போதோ அல்லது பயணத்தின் முன்போ உங்களுடைய விசாவை எடுப்பது குறித்து டிராவல் ஏஜென்சியிடம் அறிந்துகொள்ளுங்கள்.

சுற்றுலா விசாவில் அமீரகம் வருவோருக்கு ICA அல்லது GDRFA அனுமதி தேவையில்லை.

கொரோனா பரிசோதனை வழிமுறைகள்:

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பரிக்கா, உகாண்டா, நைஜீரியா, வியட்நாம், ஸாம்பியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து துபாய் வருவோர் கீழ்க்கண்ட கொரோனா பரிசோதனை வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

  • பயண நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா PCR சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் பரிசோதனை எடுக்கும் பரிசோதனை மையம் ICMR ஆல் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். சான்றிதழில் QR Code இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பயண நேரத்திற்கு 6 மணிநேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் ரேபிட் பரிசோதனை (molecular diagnostic testing) எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

Stock-Emirates-airlines-aircraft_
21 Shares
Share via
Copy link