ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 10 நாடுகளில் இருந்து துபாய் வருவோருக்கு தடை விதிப்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 28 ஆம் தேதிமுதல் இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட நாடுகளின்/ நகரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- லுவாண்டா (அங்கோலா குடியரசு)
- கோனாக்ரி (கினியா குடியரசு)
- நைரோபி (கென்யா குடியரசு)
- டார் எஸ் சலாம் (தான்சானியா ஐக்கிய குடியரசு)
- என்டெபே (உகாண்டா குடியரசு)
- அக்ரா (கானா குடியரசு)
- அபிட்ஜான் (கோட் டி ஐவரி குடியரசு)
- அடிஸ் அபாபா (எத்தியோப்பியா கூட்டாட்சி ஜனநாயக குடியரசு)
- லுசாகா (சாம்பியா) – ஹராரே (ஜிம்பாப்வே)
- கோனாக்ரியில் இருந்து டாக்கருக்கு வரும் வாடிக்கையாளர்களும் பயணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
துபாயிலிருந்து இந்நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு எவ்விதத் தடையும் இல்லை என எமிரேட்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
பயணிகள் தங்களது விமான டிக்கெட்டை மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் சந்தேகங்களுக்கு தங்களது பயண முகவர்களைத் தொடர்புகொள்ளும்படி எமிரேட்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.