UAE Tamil Web

இந்த 2 நாடுகளில் இருந்து மக்கள் துபாய் வரத் தடை – எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு..!

DXB

துபாயைச் சேர்ந்த விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கோலா மற்றும் கினியா நாடுகளிலிருந்து மக்கள் துபாய் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மறுஅறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 28 ஆம் தேதிமுதல் இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எமிரேட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில்,” கீழ்க்கண்ட நாடுகளில் இருந்து மக்கள் துபாய் வரவோ அல்லது துபாய் வழியாகவோ பயணிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • அங்கோலா குடியரசு
  • கினியா குடியரசு

அதேபோல, கோனாக்ரி முதல் தகர் (Conakry to Dakar) வரையில் பயணிப்பவர்களுகும் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக டிசம்பர் 26 ஆம் தேதிமுதல் கென்யா, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்து துபாய் வருவதற்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

DXB
5 Shares
Share via
Copy link