UAE Tamil Web

துபாய்: காலாவதியான ரெசிடென்சி விசாவின் செல்லுபடிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு..!

Visa--GDRFA_work-permit

கொரோனா காரணமாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் அமீரகம் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பல பயணிகளின் ரெசிடென்சி விசா காலாவதியானது. இதனால் இவர்கள் அமீரகம் வருவது கேள்விக்குறியான நிலையில் காலாவதியான துபாய் ரெசிடென்சி விசாக்கள் மேலும் மூன்று மாத காலத்திற்கு (டிசம்பர் 9 வரையில்) செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான விசாக்களின் செல்லுபடிக்காலம் தாமாகவே மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது (கருணை காலமான 1 மாதத்தையும் சேர்த்து) எனவும் இதற்கென தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய அமர் மையத்தின் கால் சென்டர் பணியாளர் ஒருவர்,” துபாய் அரசினால் வழங்கப்பட்டு காலாவதியான ரெசிடென்சி விசாவின் செல்லுபடிக் காலம் கருணை காலமான ஒரு மாதத்தையும் சேர்த்து மொத்தம் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

காலாவதியான துபாய் ரெசிடென்சி விசாவுடன் வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்கள் மற்றும் டிராவல் ஏஜெண்டுகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன்பு GDRFA இடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் மேலும் அரசு விதித்துள்ள பிற பயண கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுமென அமர் மைய பணியாளர் குறிப்பிட்டார்.

இந்த விசா செல்லுபடிக் காலம் நீட்டிப்பு துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தற்போது அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிற எமிரேட்டுகளில் விசா பெற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதத்திற்கும் மேலாக தங்கியவர்களும் அமீரகம் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் அஃபி அஹமத் இது குறித்துப் பேசுகையில்,” நிலைமையை கவனித்த வரையில் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்குப் பின்பு காலாவதியான ரெசிடென்சி விசாக்களுக்கு மட்டுமே தற்போது செல்லுபடிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு காலாவதியான விசாக்களின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்படவில்லை. மே மற்றும் ஜூன் மாதத் துவக்கத்தில் காலாவதியான விசா கொண்டவர்களுக்கும் விரைவில் இந்த சேவை அளிக்கப்படும்”

“அதேபோல அமீரகத்திற்கு வெளியே 180 நாட்கள் தங்கியிருந்தவர்கள் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) ஒப்புதல் அல்லது GDRFA ஒப்புதல் பெற்று அமீரகம் திரும்பலாம். தற்போதைய நிலைமையில் துபாய் ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

அரூபா டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரஷீத் அப்பாஸ் இது பற்றிப் பேசுகையில், “பெண்ணொருவரின் விசா ஜூலை 22ஆம் தேதி காலாவதி ஆனது. அவருக்கு GDRFA ஒப்புதல் பெற முயற்சிக்கையில் அவரது விசா செல்லுபடிக் காலம் தாமாகவே டிசம்பர் 9 வரையில் நீட்டிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் உடனடியாக விசா விபரங்களை அறிந்துகொள்ளும் இணையதளத்தில் தேடினோம். அதில் காலாவதியான பலருடைய விசாக்களுக்கும் செல்லுபடிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. சிலருக்கு நீட்டிக்கப்படவில்லை. இருப்பினும் விரைவில் பலருக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிகிறது” என்றார்.

இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ள துபாய் வாழ் இந்தியரான தினேஷ் ஐஸ்வர் தாஸ் இது பற்றி பேசுகையில் “என்னுடைய விசா ஜூலை 19ஆம் தேதி காலாவதி ஆனது. GDRFA இணையதளத்தில் நான் பரிசோதிக்கும் போது என்னுடைய விசா டிசம்பர் 9ஆம் தேதி வரையில் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது என்னால் அமீரகம் திரும்ப முடியும்” என்றார்.

உங்களுடைய விசாவின் நிலைமையை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Visa--GDRFA_work-permit
32 Shares
Share via
Copy link