UAE Tamil Web

துபாய் – திருச்சி விமான பயணம்.. 5 மணிநேரம் தாமதமாக புறப்பட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் – பெரும் சிரமத்துக்குள்ளான பயணிகள்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இருந்து துபாய் வரும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயந்திர கோளாறுகளை சந்தித்து வருகின்றது. நேற்று முன்தினம் மதுரையில் இருந்து புறப்படவிருந்த விமானம் 6.45 மணிநேரம் தாமதமானது.

அதேபோல நேற்று மதுரையில் இருந்து துபாய் புறப்படவிருந்த தனியார் விமானம் ஒன்று அதே போல பழுதாகி நின்ற நிலையில் இருந்திவரை கோளாறு சரிசெய்யப்படாமல் அந்த விமான சேவை இறுதியியல் ரத்தானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இரவு துபாய் Al Maktoum விமான நிலையத்தில் இருந்து தமிழகத்தில் திருச்சிக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் முதலில் 1 மணிநேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் சுமார் 5 மணிநேர காத்திருப்புக்கு பிறகு அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று 14ம் தேதி நள்ளிரவு 12.55 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு 2 மணிக்கு சென்றடைந்துள்ளது. பல மணிநேரம் காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

இந்த விமானம் ஏன் காரணத்தால் தாமதமானது என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap