துபாய் உம் அல் ஷீஃப் மெட்ரோ நிலையம், 10 ஆண்டுகளுக்கு ஈக்விட்டி மெட்ரோ நிலையம் என மறுபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், மெட்ரோ நிலையத்தின் பெயரை ஈக்விட்டி நிறுவனத்திற்கு மறுபெயரிடுவதற்கான உரிமையை வழங்கியுள்ளது.
துபாய் மெட்ரோ நெட்வொர்க்கின் ரெட் லைனில் இந்த நிலையம் செயல்படுகிறது.
EQUITI குழுமத்தில் தலைமை செயல் அதிகாரி இஸ்கந்தர் நஜ்ஜார் கூறியதாவது: “EQUITI யின் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க துபாயின் மிக முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஷேக் ஜயீத் சாலையில் உள்ள மெட்ரோ நிலையத்திற்கு EQUITI என்று பெயரிடும் உரிமையின் மூலம் பெருமையடைகிறேன்” என்றார்.
“மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடும் உரிமைகள், அமீரகத்தில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு துபாயில் தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்த ஒரு முதலீட்டு வாய்ப்பாக அமைகிறது.
இது பல்வேறு பெரிய நிதி மற்றும் வணிக நிறுவனங்களுக்கான ஒரு முத்திய தளமாக தனித்து நிற்கிறது” என்று RTA-வின் ரயில் ஏஜென்சியின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் முஹ்சின் இப்ராஹிம் தெரிவித்தார்,