UAE Tamil Web

துபாய்: பார்க்கை அதிரவைத்த துப்பாக்கிச் சப்தம் : ஒருவர் கைது..!

Dubai Police

இந்த ஆண்டு ஜனவரி மாதம் துபாயில் உள்ள பார்க் ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியடைய வைத்த இந்த சத்தத்தை உருவாக்கியவர் வங்க தேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர்.

டிக்டாக் மோகம்

உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் வேலையை செய்துவரும் இவர், பார்க்கிற்குச் சென்று துப்பாக்கி சுடும் சத்தத்தையும் மக்கள் அலறி ஓடும் சப்தத்தையும் ஓடவிட்டு டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

காவல்துறை கவனத்திற்குச் சென்ற இந்த வீடியோவினால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அத்தோடு அவரது டிக்டாக் பக்கமும் முடக்கப்பட்டிருக்கிறது. பொது வழக்குத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவருக்கு துபாய் நீதிமன்றம் 6 மாதம் சிறைத்தண்டனையும் 5000 திர்ஹம்ஸ் அபராதமும் விதித்திருக்கிறது.

நாட்டின் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் அவர் உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Dubai Police
0 Shares
Share via
Copy link