ஐக்கிய நாடுகள் சபை உலகின் வேகமாக மீண்டெழும் திறனுள்ள நகரமாக (World’s Most Resilient City) துபாயைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதனையடுத்து துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துபாய் அரசுத் துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இயற்கை பேரிடர் ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தவிர்க்கும் முயற்சியில் சிறப்பாக செயல்பட்டதால் ஐநா இந்த கவுரவத்தை துபாய்க்கு வழங்கியுள்ளது.
துபாய் அரசின் மூத்த அதிகாரிகள் இதுகுறித்துப் பேசுகையில்,” அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாயின் இளவரசரும் துபாயின் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய திறமையான முடிவுகள் மற்றும் வழிக்காட்டல்களே இந்த அந்தஸ்து கிடைத்ததற்குக் காரணம்” என்றனர்.
