துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டர் (DIFC) அளித்த தகவலின்படி, அமீரகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு துபாய் அரசு ஜூலை 2022 முதல் End-of-Service Saving Scheme திட்டத்தை செயல்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சேமிப்புத் திட்டம் பயனளிக்கும்.
துபாய் அரசாங்கத்தில் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் நிறுவனமான DIFC, துபாய் அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளுடன் பல மெய்நிகர் சந்திப்புகளை நடத்தியது.
அதன் இறுதியில் தற்போது இந்த சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான மதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ஊழியர்களுக்கு பல்வேறு சேமிப்பு வாய்ப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த அமைப்பை வழங்குவதன் மூலம் நல்ல திறமைகளை ஈர்க்கும் மற்றும் தக்கவைக்கும் நோக்கத்துடன் மார்ச் 2022ல் இந்த நிதியை தொடங்க ஒப்புதல் அளித்தார்.
அவர்களின் தற்போதைய மற்றும் நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் உரிமைகள் மற்றும் சேமிப்புகளை மேம்படுத்தும் வகையில் இது அமைக்கப்படும். துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டர், பணியிடத்தில் பணியாளர் சேமிப்பு நிதிக்கான திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு வந்த இந்தத் திட்டம், முதல் கட்டமாக அரசு நிறுவனங்களில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை குறிவைத்து செயல்படுத்தப்பட்டும்.
மேலும் இந்த திட்டம் இன்னும் விரிவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது, அமீரக அரசின் இந்த சேமிப்பு திட்டம் நிச்சயம் இங்கு பணிசெய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் தான்.