UAE Tamil Web

அடுத்த பிரம்மாண்ட ஏலத்திலும் வெற்றி பெற்ற துபாய் – மகிழ்ச்சியில் துபாய் ஆட்சியாளர்..!

sheikh family

உலக அருங்காட்சியக கூட்டமைப்பின் 2025 ஆண்டு உச்ச மாநாட்டினை நடத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகள் போட்டிபோட்டன. இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் துபாய் அனைத்து முன்னணி நகரங்களையும் பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகை சூடியிருக்கிறது.

2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் 119 நாடுகளைச் சேர்ந்த 20,000 சர்வதேச அருங்காட்சியங்கள் பங்கேற்க இருக்கின்றன. இதன்மூலம் அமீரக கலாச்சார மற்றும் சுற்றுலா வளர்ச்சி மிக அதிகளவில் வளர்ச்சியை சந்திக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதுகுறித்து அமீரகத்தின் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” உலகின் மிகப்பெரிய அருங்காட்சியக மாநாடான Aecom 2025-ஐ நடத்துவதற்கான ஏலத்தில் துபாய் வென்றிருக்கிறது. 119 நாடுகளைச் சேர்ந்த 20,000 சர்வதேச அருங்காட்சியங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றன. இது அமீரக கலாச்சார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

sheikh family
34 Shares
Share via
Copy link