துபாய் கோல்ட் & ஜுவல்லரி குழுமத்தால் நடத்தப்படும் குலுக்கல் போட்டியில் தங்கம், ரொக்கம் என 30 மில்லியன் திர்ஹம் அளவிற்கு பரிசுகளை வென்றுள்ளனர். இந்தப் போட்டிகளில் பரிசுகளை வென்ற சிலர் உற்சாகத்துடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
துபாயை சேர்ந்த ஒரு மருந்தாளுனரான நுஸ்ரத் என்ற பெண் தன் முதலாளியின் உறவினருக்கு பரிசு வாங்குவதற்காக, அவருடன் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் ராஃபிள்ஸ்க்கு வந்துள்ளார். பரிசினை வாங்கிய பிறகு கடையிலிருந்து அவருக்கு லக்கி டிரா போன்ற கூப்பன் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலாளி நுஸ்ரத்தின் குழந்தையின் பெயரை அந்த படிவத்தில் பூர்த்தி செய்து கடையில் கொடுத்து விடுமாறு கூறியுள்ளார். நுஸ்ரத்தும் எதையும் எதிர்பார்க்காமல் சொன்னபடியே செய்துவிட்டார்.
திடீரென்று நுஸ்ரத்திற்கு 250 கிராம் தங்கம் பரிசு விழுந்துள்ளது என்று கூறியவுடன், முதலில், அது ஒரு குறும்பு வேலை என்று அவர் நினைத்துள்ளார். பின்பு அது நிஜம் என்று தெரிந்தவுடன் தான் சந்தோஷத்தில் இறைவனுக்கு மெய்மறந்து நன்றி தெரிவித்ததாகவும் , தன்னுடைய அனுபவத்தை நுஸ்ரத் பகிர்ந்து கொண்டார்.
நுஸ்ரத்துக்கு கிடைத்த பரிசை முதலாக வைத்து, அவர் ஒரு வீடு கட்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த ஜனத் காதர் என்பவரும் துபாய் கோல்ட் & ஜுவல்லரி குழுமத்தால் நடத்தப்படும் குலுக்கல் போட்டியில் 250 கிராம் தங்கத்தை வென்றுள்ளார். இவருடைய கதையும் சற்று சுவாரஸ்யமாகவே உள்ளது.
முடிந்துபோன பிறந்தநாளுக்கு தாமதமாக பரிசு வாங்குவதற்காக கோல்ட் ஷேய்க் என்ற கடைக்கு சென்றுள்ளார். அப்போது நகை வாங்கிய பிறகு பணம் செலுத்துவதற்காக சென்றபோது, காசாளர் அவருக்கு ஒரு கூப்பனை கொடுத்து, அதை நிரப்ப கூறியுள்ளார்.
தனக்கு அதிர்ஷ்டம் என்பது சுத்தமாக இல்லை என்று கூறியபடியே, அந்த படிவத்தை நிரப்பிய அவருக்கு மகிழ்ச்சியில் திளைக்கும் அளவுக்கு தங்கப்பரிசு கிடைத்துள்ளது. இன்றுவரை தான் வெற்றி பெற்றதை, இன்னமும் தன்னால் நம்ப முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், ஜனத்.
பாகிஸ்தானை சேர்ந்த முஹம்மது என்பவர் தனது தாயாருக்கு பரிசு வாங்கும்போது, தனக்கு இந்த 250 கிராம் தங்கப் பரிசு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையை கூறினால், இப்படிப்பட்ட ஒரு பரிசு தனக்கு கிடைக்கும் என்று தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், இனி வரும் நாட்களில் தான் தங்கம் சேர்ப்பதை பற்றி கவலைப்படாமல் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
துபாய் கோல்ட் ஜுவல்லரி ராஃபிள்ஸ் ஜனவரி 29 வரை நடைபெறுகிறது. இது மொத்தம் 25 கிலோ தங்கம் வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. துபாய் முழுவதிலும் சுமார் 180 விற்பனை நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் நகைகளை வாங்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கலாம். டி எஸ் ஃப் – ன் தற்போதைய 27வது பதிப்பின் போது வழங்கப்படும் இந்த ராஃபிள்ஸ்ல் , தங்கம் மட்டுமல்லாமல் 30 மில்லியன் திர்ஹம் வரை பல ரொக்கப் பரிசுகளும் மக்களுக்கு அள்ளி கொடுக்கிறது.