UAE Tamil Web

தண்ணீர் குடிக்கும்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளி – துபாயில் சோகம்..!

water cooler

துபாயில் தொழிலாளி ஒருவர் தண்ணீர் குடிக்கச் சென்று, மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழுதான தண்ணீர் குளிர்விப்பானில் இருந்து கசிந்த மின்சாரமே தொழிலாளியின் உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் பொறியியல் தடயறிவியல் பிரிவு அதிகாரி கேப்டன் அப்துல்லா அல் ரஷீத் அலி,” போதிய பராமரிப்பின்றி உள்ள இயந்திரங்களால் இப்படி விபத்துகள் நிகழ்கின்றன. கடந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து ஜூலை மாதம் வரையில் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆகும்”

“இது பெரும்பாலும் பாதுகாப்புக் குறைபாடுகளால் நிகழ்கிறது. குறிப்பாக கட்டுமான நிறுவனங்கள், இண்டஸ்ட்ரியல் பகுதிகளில் நிகழும் இம்மாதிரியான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இதுவரையில் மொத்தமாக 145 பேர் இதுபோன்ற விபத்துகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

சமீபத்தில் சரியாக பொருத்தப்படாத பில்போர்டு கீழே விழுந்ததில் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்தனர். அதில் ஒரு குழந்தையின் கை மற்றும் கால்கள் நிரந்தரமாக செயலிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வீட்டற்கு வெளியே தண்ணீர் குளிர்விப்பான் வைத்திருக்கும் நபர்கள் அதில் போதிய நேரத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் கட்டுமான மற்றும் பிற கம்பெனிகள் மின்சார இயந்திரங்களின் பராமரிப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் அப்துல்லா தெரிவித்தார்.

water cooler
4 Shares
Share via
Copy link
Powered by Social Snap