எமிரேட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு A380 விமானம் இன்று மற்றும் நாளை துபாயின் ஷேக் சயீத் சாலை மற்றும் துபாய் எக்ஸ்போ 2020 பகுதியை தாழ்வான உயரத்தில் வட்டமடிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதிகாலை 5 மணிமுதல் 8 மணிவரையில் மக்கள் இந்த வண்ணமிகு விமானத்தினைப் பார்க்க முடியும் எனவும் இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
பறக்க தடை விதிக்கப்பட்ட இடங்களை டிரோன் மூலமாக வீடியோ எடுக்க மக்கள் முயற்சிக்கக்கூடாது எனவும் விமான நிலைய அதிகாரிகள் விதித்துள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று எமிரேட்ஸ் A380 விமானம் துபாயின் முக்கிய பகுதிகளுக்கு மேலே தாழ்வான உயரத்தில் பறந்தது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
View this post on Instagram
அடுத்த சில மாதங்களுக்கும் இந்த சிறப்பு பயணத்தை இவ்விமானம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
