UAE Tamil Web

பல தேசிய இனங்கள், பின்னணிகளை கொண்டவர்களை ஒன்றிணைக்க பிரத்யேக ஆன்லைன் தளம் அறிமுகம்..

dubai

சமூக சகவாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒரு பிரத்யேக ஆன்லைன் தளத்தை, துபாயில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) அறிமுகப்படுத்தியுள்ளது.

- Advertisment -

சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக ‘கலாச்சார தொடர்பு மகிழ்ச்சிக்கான அமீரக நாள்- ’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்ஆன்லைன் மூலம் சுமார் 150 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த ஆன்லைன் அமர்வில் IACAD, துபாய் காவல்துறை மற்றும் துபாயின் சமூக நலத்துறை ஆகியவற்றின் பேச்சாளர்கள் அமீரகத்தின் சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை குடியிருப்பாளர்களை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தனர்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் தளம். எனவே அவர்கள் தங்கள் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளை பற்றிய அனுபவங்களையும், யோசனைகளையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த ஆன்லைன் தளம் பல பொது நபர்களைக் கொண்டிருக்கும். ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் நேரலையில் ஒளிபரப்பப்படும். ஒளிபரப்பிற்கு சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி குறித்த தகவல் IACAD-யால் அறிவிக்கப்படும். இது தொடர்பாக பேசிய IACAD இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹமத் அல் ஷேக் அகமது அல் ஷைபானி, இந்த தளம் பல்வேறு சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு சேவையாகும்.

மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஆகியோரின் முயற்சியால் அமீரகம் நிறுவப்பட்டதிலிருந்து பல தேசங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் அமீரக நிலத்தில் பாகுபாடின்றி வாழ்ந்து வருகின்றனர்.

துபாய் மற்றும் உலகிலுள்ள பல்வேறு சமூகங்களுக்கிடையில் பாலங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த தளத்தை அமைப்பதில் இஸ்லாமிய விவகாரத் துறையும், IACAD-யின் முகமது பின் ரஷீத் இஸ்லாமிய கலாச்சார மையமும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக கூறியுள்ளார்.

கல்வி மற்றும் பயிற்சி விவகாரங்களுக்கான துபாய் காவல்துறையின் உதவித் தளபதி மேஜர் ஜெனரல் டாக்டர் முகமது அகமது பின் ஃபஹத், அமீரகத்தின் கலாச்சாரத்தில் வளர்ந்துள்ள சகிப்புத்தன்மை பற்றியும், அனைவரையும் சமமாகக் கருதும் நாட்டின் நியாயமான நீதி முறைமை குறித்தும் பேசினார்.