UAE Tamil Web

துபாய் துணை ஆட்சியாளர் மறைவு: 3 நாட்கள் விடுமுறை, 10 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிப்பு – அரசு உத்தரவு..!

Sheikh Hamdan

துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரக நிதி அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் இன்று காலமானதாக துபாய் ஆட்சியாளர் அறிவித்தார்.

- Advertisment -

இதனையடுத்து நாளை முதல் 3 நாட்களுக்கு துபாய் முழுவதிலும் உள்ள அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஷேக் ஹம்தானின் மறைவிற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அமீரக கொடியானது அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அனைத்துத் துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அமீரக நிதிக் கொள்கையை ஸ்திரப்படுத்தியதில் ஷேக் ஹம்தானின் பங்களிப்பு மிக முக்கியமானது என அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்திருக்கிறார்.