UAE Tamil Web

துபாயில் பரபரப்பு: தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, லாரி மீது மோதல்: 28 தொழிலாளர்கள் காயம்..!

Dubai Bus Accident

துபாயில் இன்று காலை 8.45 மணிக்கு வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, லாரி மீது மோதி விபத்திற்குள்ளாகியிருக்கிறது. துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 28 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

- Advertisment -

இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். உயிரிழப்புகள் ஏதுமில்லை எனவும், காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சைகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் துபாய் காவல்துறை இந்நிகழ்வு குறித்து ஏதும் தகவல் தெரிவிக்கவில்லை. விபத்தின் காரணம் என்ன? தொழிலாளர்கள் தற்போதைய நிலை என்ன என்பதை காவல்துறை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு நமது இணையதளத்தில் இணைந்திருங்கள்.