அமீரகத்தில் உள்ள 600 பள்ளிகளைச் சேர்ந்த 620,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் துபாய் ஃபிட்னெஸ் சேலஞ்சை (DFC) ஏற்று கொண்டுள்ளனர் என்று அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
DFC என்பது பங்கேற்பாளர்கள் 30 நாட்களுக்கு 30 நிமிடங்கள், உடலை மேம்படுத்தும் பயிற்சிகளில் தவறாமல் ஈடுபட வேண்டும். இந்த சவால் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கியது. வீட்டிலோ அல்லது வகுப்பறைகளிலோ வைத்து இந்த சவாலில் பங்கேற்கும் 2 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் 80-க்கும் மேற்பட்ட இலவச விளையாட்டுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை அணுகலாம்.
இந்த சவாலில் பங்கேற்கும் குழந்தைகள் செய்யக்கூடிய பயிற்சிகள் குறித்த குறிப்புகள் www.dubaifitnesschallenge.com/education-இல் கிடைக்கின்றன. இதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தி கொண்டு குழந்தைகளுக்கு வழிகாட்டலாம்.
அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா அல் கரம், ‘வேறு எந்த நேரத்தையும் விட, ஆரோக்கியமாக இருப்பதும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. இது அனைத்தையும் DFC ஒன்றாக கொண்டு வருகிறது.
தற்போதுள்ள உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை வளர்ப்பதற்கும், புதியவற்றைத் தொடங்குவதற்கும் பல பள்ளிகளும் குடும்பங்களும் ஆன்லைனில் ஒன்றிணைவதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
துபாய் ஃபெஸ்டிவல் மற்றும் ரீடெய்ல் விற்பனை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா கூறுகையில் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு முக்கியமான ஒன்று. நகரம் முழுவதும் உள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இளைஞர்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதன் மூலம் அதிகபட்ச நன்மைகளை அடைய ஊக்குவிப்பதற்கும், உடற்தகுதி அவர்களின் அன்றாட வாழ்க்கையின் இன்னும் சுவாரஸ்யமான பகுதியாக மாற்றுவதற்கும் ஒரு வாய்ப்பாக DFC உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அல் காஜா, பள்ளிகள் பெரும்பாலும் குழந்தைகளின் உடற்தகுதிக்கு வழிகாட்டும் முதல் மன்றங்களாக இருக்கின்றன. தொலைதூரக் கற்றலில் குழந்தைகளுக்கு வேடிக்கையையும், உற்சாகத்தையும் சேர்க்கும் அதே வேளையில், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் அர்த்தமுள்ள அனுபவங்களுடன் வாழ்நாள் முழுவதும் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது என்றார்.
ஆன்லைன் மெய்நிகர் உடற்பயிற்சிகளும், ஆரோக்கியம் மற்றும் நடன அமர்வுகள்
www.dubaifitnesschallenge.com/education-இல் கிடைக்கின்றன. ஐஎம்ஜி வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சரின் கதாபாத்திரங்களுடன் வேடிக்கையான உடற்பயிற்சிகளும் இதில் அடக்கம்.