UAE Tamil Web

துபாய்: ஷேக் முகமது பின் சயீத் சாலையில் விபத்து ; ஸ்தம்பித்த போக்குவரத்து – கவனமுடன் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தல்..!

Sheikh Zayed Road

துபாய்: ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இன்று மதியம் நிகழ்ந்த விபத்தினால் அச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கிறது. அவ்வழியில் செல்பவர்கள் கவனமுடன் வாகனத்தை இயக்குமாறு துபாய் காவல்துறை ட்விட்டர் வழியாக பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”ஷேக் முகமது பின் சயீத் சாலையில் அல் ரஷிதியா மேம்பாலத்தைத் தாண்டி, ஜெபல் அலி செல்லும் வழியில் விபத்து நேர்ந்திருக்கிறது. இதன் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

Sheikh Zayed Road
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap