UAE Tamil Web

1 திர்ஹம்ஸில் விமான டிக்கெட்: விமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

Dubai-airport_172a40494f3_large

பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான செபு பசிபிக் (Cebu Pacific) தனது 25 ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மார்ச் 3 முதல் 5 ஆம் தேதிகளில் துபாய் – மணிலா இடையிலான ஒரு வழி பயணத்திற்கான (One Way) விமான டிக்கெட்டை 1 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்துவருகிறது.

ஜூன் 1, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரையிலான தேதிகளில் இந்த டிக்கெட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

“எங்களுடைய 25 ஆம் ஆண்டுவிழாவில், மக்களின் மகிழ்ச்சியான பயணங்களில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம். பயண விதிமுறைகளை எளிமையாக்குவதன் மூலமாக நாங்கள் எதிர்வரும் காலத்தில் அதிக பயணிகளை வரவேற்கக் காத்திருக்கிறோம்” என செபு பசிபிக் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ துறையின் துணைத் தலைவர் கேண்டிஸ் லியாக் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் விமான ஆட்-ஆன்களுக்கு (flight add-ons) 25% தள்ளுபடியும் அளிக்க இருக்கிறது இந்த நிறுவனம்.

“எங்களுடைய 25 ஆண்டுகால வரலாற்றில் எங்களுடைய வாடிக்கையாளர்களுடன் பல மகிழ்ச்சியான தருணங்களில் இணைந்துள்ளோம். இனிவரும் காலங்களில் பெருமகிழ்ச்சியுடன் அனைவரும் பயணம் மேற்கொள்ள விரும்புகிறோம்” என லியாக் தெரிவித்தார்.

Dubai-airport_172a40494f3_large
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap