UAE Tamil Web

இந்த வாரமும் துபாயின் இப்பகுதி மூடப்படுவதாக RTA அறிவிப்பு – வாகனவோட்டிகள் மாற்றுவழியில் செல்லவும்..!

AL SHINTAGA

துபாயில் உள்ள அல் ஷிண்டாகா சுரங்கப்பாதை நாளை (அக்டோபர் 30) காலை 12.30 (AM) முதல் காலை 8 மணி வரையிலும் மூடப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளது. தேராவை, புர் துபாயுடன் இணைக்கும் இந்த சுரங்கப்பாதை இன்று காலை 12.30 (AM) முதல் காலை 10.30 மணி வரையிலும் மூடப்பட்டிருக்கும் என RTA தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

- Advertisment -

ஆகவே வாகனவோட்டிகள், அல் மக்தூம் மேம்பாலம் (Al Maktoum Bridge) மற்றும் கார்ஹூட் மேம்பாலம் (Garhoud bridge) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக குறிப்பிட்ட சில வழித்தட பேருந்துகளின் இயக்கம் தாமதமாகலாம் என போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

X13, X02, 8, 95, C01, C03, C07, C09, C18, E306 மற்றும் X23 ஆகிய வழித்தட பேருந்துகள் இயக்கம் இதனால் தாமதமடையலாம்.