UAE Tamil Web

துபாய்: 5 பகுதிகளில் இ-ஸ்கூட்டர்களுக்கு அனுமதி.! எப்படி வாடகைக்கு எடுப்பது.? தெரிந்து கொள்ளுங்கள்..

escoot1

துபாயில் இ-ஸ்கூட்டர்களின் சோதனை கட்டத்தை RTA இன்று அறிமுகப்படுத்தியது. துபாயில் தற்போது 5 பகுதிகளில் மட்டுமே இந்த இ-ஸ்கூட்டர்களின் சோதனை கட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

அதன்படி முகமது பின் ரஷீத் பவுல்வர்டு(Mohammed Bin Rashid Boulevard), துபாய் இன்டர்நெட் சிட்டி, செகண்ட் ஆஃப் டிசம்பர் ஸ்ட்ரீட்(2nd of December Street), அல் ரிகா மற்றும் ஜுமேரா லேக் டவர்ஸ் ஆகிய 5 மண்டலங்களில் சோதனை செய்யப்படும் இ-ஸ்கூட்டர்களை பணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம்.

Escooter

மக்கள் அடர்த்தி, தனியார் முன்னேற்றங்கள், பொது போக்குவரத்து சேவைகளின் கிடைக்கும் தன்மை, ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிக போக்குவரத்து பாதுகாப்பு பதிவுகள் போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களின்படி மேற்கண்ட பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள உயரதிகரிகள் அனுமதிக்கப்பட இடங்களை தவிர வேறு பகுதிகளில் இ-ஸ்கூட்டர்களை இயக்கி செல்ல கூடாது. அதே போல இ-ஸ்கூட்டர்களை 20 கி.மீ வேகத்திற்கு மேல் இயக்க கூடாது. இதை மீறும் ரைடர்களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு என்று கூறினர்.

E2

தேராவில் வசிக்கும் நோஃபல் என்பவர் பேசுகையில், புர்ஜுமானில் நான் வேலை செய்கிறேன்.ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்ல துபாய் மெட்ரோவைப் பயன்படுத்துகிறேன். நான் இதற்கு முன்பு ஒரு இ-ஸ்கூட்டரை பயன்படுத்தியதில்லை. ஆனால் அது நிச்சயமாக நான் பயன்படுத்த வேண்டிய ஒன்று, ஏனெனில் எனது வீடு மெட்ரோ நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த குறுகிய பயணத்திற்கு இ-ஸ்கூட்டர் எளிது”என்றார்.

ஜியோஃபென்சிங் தொழில்நுட்பம்..

இந்த இ-ஸ்கூட்டர் சோதனை கட்டத்தில் மூன்று சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இரு உள்ளூர் நிறுவனங்கள் உட்பட ஐந்து ஆபரேட்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.(Careem, Lime,Tier, Arnab and Skurrt). RTA-வின் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஹுசைன் அல் பன்னா இது குறித்து பேசுகையில், சோதனைக்கு உட்படுத்தப்படும் இ-ஸ்கூட்டர்களில் ஜியோஃபென்சிங்(geofencing) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.எனவே இந்த ஸ்கூட்டர்களை பயனர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே எடுத்து சென்றால், அவற்றின் வேகம் தானாகவே குறைந்து இறுதியில் நின்று விடும். மேலும் தவறான பயன்பாட்டிற்கு எதிராக பயனர்களை எச்சரிக்கும் வகையில் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ளன” என்றார்.

E3

மேலும் பேசிய அவர் ஸ்கூட்டர்கள் சைக்கிள் தடங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய சாலை அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளன. “பொறுப்பற்ற ரைடர்ஸ் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ரைடர்ஸ் ஹெல்மெட் மற்றும் முககவசம் அணிவது கட்டாயமாகும்.

எப்படி வாடகைக்கு எடுக்க வேண்டும்.?

இ-ஸ்கூட்டர்கள் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் வாடகைக்கு கிடைக்கின்றன. ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு அருகிலுள்ள இ-ஸ்கூட்டரை பயனர்கள் தேர்வு செய்யலாம். பயனர்கள் ஆப் மூலம் பதிவு செய்து அவர்களின் இ -ஸ்கூட்டரைக் கண்டறிந்ததும், அதில் உள்ள QR குறியீட்டில் தங்கள் சாதனங்களை பயணத்தின் துவக்கத்திலும், முடிவிலும் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். பயணத்தை முடித்து கொள்ள விரும்பும் ரைடர்ஸ், அதேகேற்றவாறு சரியான இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்த வேண்டும். நிறுத்தியதும் பயனர்கள் கட்டணம் செலுத்துமாறு கேட்கப்படுவார்கள்.

கட்டணங்கள்..

இந்த சேவையை அன்லாக் செய்ய 3 திர்ஹம்ஸ் மற்றும் அதன் பின்னர் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 50 முதல் 60 ஃபில்கள் வரை செலவாகும். குறிப்பாக ரைடர்ஸ் 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஐந்து நிமிட பயணத்திற்கு ஏறக்குறைய 6 திர்ஹம்ஸ் ஆகும். ஆப் வழியாக பணம் செலுத்தலாம். இது ரைடர்ஸின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.