UAE Tamil Web

அதிர்ஷ்ட எண்ணை நம்பிய ஆஸ்திரேலிய பெண்மணி.! துபாய் டூட்டி ஃப்ரீ ரேஃபிளில் 1 மில்லியன் டாலர் பரிசை தட்டி சென்றார்..

rafle

61 வயதான ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண்மணியான எலனோர் பேட்டர்சன், நம்பர் 3 என்பது தனக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று எப்போதும் நம்புகிறார். இவர் ஒரு செவிலியராக பணியாற்றி வருகிறார்.

- Advertisment -

எனவே, அவர் எப்போதும் துபாய் டூட்டி ஃப்ரீ ரேஃபிளில் டிக்கெட்டை 3 என்ற எண் வருமாறு தேர்வு செய்வது வழக்கம். 10 ஆண்டுகளாக அவர் இந்த டிராவில் பங்கேற்று வருகிறார். மேலும் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை டிராவில் பங்கேற்று வந்துள்ளார். சமீபத்திய துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ரேஃபிள் டிராவில் பங்கேற்ற அவர், 1 மில்லியன் டாலர்((இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.7 கோடி) ஜாக்பாட் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

எலனோர் பேட்டர்சன் கடந்த அக்டோபர் 19 அன்று ஆன்லைனில் துபாய் டூட்டி ஃப்ரீ ரேஃபிளின் சீரிஸ் 343 -ல் 0353 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியுள்ளார். துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவின் போது எலனோர் பேட்டர்சன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ஜாக்பாட் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் வசிக்கும் பேட்டர்சன், ‘நன்றி, துபாய் மற்றும் துபாய் டூட்டி ஃப்ரீ, எனது விடாமுயற்சியும், அதிர்ஷ்ட எண்ணும் இறுதியாக எனது கனவை பலிக்க செய்துள்ளன. நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

1980-களின் முற்பகுதியில் அமீரகத்தில் வசித்த போது துபாயில் அரச குடும்பத்திற்கு சேவை செய்யும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக கல்ஃப் நியூஸிடம் அளித்த தொலைபேசி வாயிலான பேட்டியில் கூறியுள்ளார். அமீரகம் வந்து இரவு நேர பாலைவன முகாமை அனுபவிப்பது என் கனவில் ஒன்று. அதை நான் இப்போது நிறைவேற்றி கொள்வேன்.

கடந்த 1999-ம் ஆண்டில் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிரா தொடங்கப்பட்டதில் இருந்து, 1 மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றுள்ள 5-வது ஆஸ்திரேலியர் எலனோர் பேட்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.