UAE Tamil Web

துபாய் : மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த காரில் தீவிபத்து – வேறுபாதையில் செல்லுமாறு காவல்துறை அறிவிப்பு..!

Bus-fire-

துபாயில் உள்ள பிசினஸ் பே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தீ விபத்திற்கு உள்ளானது.

- Advertisment -

துபாய் காவல்துறை ட்விட்டர் வழியாகத் தெரிவித்த தகவலின்படி மேம்பாலத்தில் ஷார்ஜா செல்லும் வழியில் பயணித்த கார் காலை 9.55 மணிக்கு தீப்பிடித்து எரியத் துவங்கியிருக்கிறது.

இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயினை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

வாகனவோட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு துபாய் காவல்துறை அறிவித்திருக்கிறது.