துபாய்க்கு வரும் பயணிகளுக்கான PCR சோதனை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AIE) தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக துபாய்க்கு பயணிக்கும் பயணிகள் கவனத்திற்கு என்று தலைப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அதில் “துபாய் சுகாதார ஆணையம் (டிஹெச்ஏ) வழங்கியுள்ள ஆலோசனைப்படி இனி துபாய் செல்லும் பயணிகள் சமர்ப்பிக்கும் கோவிட்-19 PCR சோதனை அறிக்கைகளின் நகலானது, அவற்றின் அசல் சோதனை அறிக்கையுடன் இணைக்கும் QR குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
#FlyWithIX : Attention Passengers Traveling to Dubai⚠️
As per the advisory issued by the Dubai Health Authority (DHA), copy of the COVID-19 PCR test report submitted by passengers must have QR code linking to their original test report. @HardeepSPuri @MoCA_GoI @cgidubai
— Air India Express (@FlyWithIX) February 17, 2021
மேலும் இனி மாதிரி சேகரிப்பு நேரம் (மாதிரி சேகரிப்பின் தேதி மற்றும் நேரம்) மற்றும் மாதிரி அறிக்கையிடல் (சோதனை முடிவின் தேதி மற்றும் நேரம்) துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும்” என்று சமீபத்திய கோவிட்-19 தொடர்பான பயண புதுப்பிப்பு குறித்து அந்த பதிவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.