UAE Tamil Web

பியூர் 24 காரட் தங்கம் கலந்த கோல்ட் டீயின் அழகிய புகைப்படங்கள் உள்ளே..

tea2

ஒரு கப் டீ குடித்தாலே போதும் நம் புத்துணர்ச்சியின் அளவே தனி தான். அதிலும் சுவை மிகுந்த கரக் டீ எனப்படும் மசாலா டீயின் சுவை நம்மை உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்து சென்று விடும்.

- Advertisment -

அப்படிப்பட்ட உற்சாக பானமான கரக் டீயில் புதிய முயற்சி செய்யப்பட்டுள்ளது. கரக் டீ மீதான அமீரக வாசிகளின் ஈர்ப்பு நாம் அனைவரும் அறிந்ததே. டீ குடிப்பதற்காக சிறிய சிற்றுண்டிச்சாலைகளை நோக்கி கார்கள் கூடிவருவதும், தங்களது கார் ஹாரன்களை ஒலிக்க செய்வதும் நாடு முழுவதும் உள்ள அனைத்து எமிரேட்டிலும் நாம் பார்க்க கூடிய ஒரு பொதுவான ஒரு காட்சியாகும்.

tea

இந்நிலையில் துபாயில் விரைவில் 24 காரட் தங்கம் கலந்த கரக் டீ விற்பனைக்கு வர உள்ளது. துபாயின் கராமாவில் உள்ள ஃபுட் கா மூட்(Food ka Mood) என்னும் உணவகம், 24 காரட் தங்க டீ(24K gold tea)-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், கரக் டீ மீதான அமீரகத்தின் அன்பை சோதிக்க உள்ளது.

தூய 24 காரட் தங்க செதில்களால்(gold flakes) நிரப்பப்பட்ட ஒரு கப் டீயானது , ‘ஜாஃப்ரான்’ மற்றும் ‘கரக்’ தேநீர் சுவைகளின் கலவையாகும். இந்த டீயானது காய்ச்சி தயார் செய்யப்பட்டபின், வெள்ளை பால் மற்றும் நொறுக்கப்பட்ட குங்குமப்பூவின் அடர்த்தியான நுரை மீது தூய தங்க செதில்கள் மென்மையாக வைக்கப்படுகின்றன. இந்த கோல்ட் மசாலா டீயின் விலை 51 திர்ஹம்ஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

tea1

கோல்ட் டீயை உருவாக்கியவரும், டீ ஸ்பெஷலிஸ்ட்டுமான ஜான்கர் உச்சாட், கொரோனா லாக் டவுனின் போது இந்த செய்முறையை கண்டுபிடித்ததாகவும், தங்கத்தின் உலோக சுவையை அதிகரிக்கும் சுவைகளின் சரியான கலவையை கண்டுபிடிக்க தனக்கு 2 மாதங்கள் பிடித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த டீயை தயார் செய்ய ஃப்ரெஷ் பசும்பாலை மட்டுமே பயன்படுத்துவதாக குறிப்பிட்டார்.

tea3

மும்பையை சேர்ந்த பெண்ணான ஜான்கர், இந்தியாவில் சமையல் பள்ளியில் பயின்ற காலத்தில் சுவையான தேர்ந்த பானங்கள் தயாரிப்பதில் ஈடுபாடு கொண்டார். மேலும் டீ தான் தனக்கு பிடித்த பானம் என்றும், அதில் வித்தியாசமான மற்றும் வேடிக்கையான படைப்புகளை சுவையாக உருவாக்குவதை தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

tea4

தீபாவளிக்கு முன்நாள் வரும் நவம்பர் 13-ம் தேதி முதல் இந்த தயாரிப்பை விற்பனைக்கு கொண்டு வர ஃபுட் கா மூட் உணவகம் முடிவு செய்துள்ளது. இது பற்றி பேசியுள்ள உணவக இணை உரிமையாளரான பார்வி பட்டி, தீபாவளியை கொண்டாடுவோர் சில தங்கங்களை வாங்குகிறார்கள். தொற்று காரணமாக சிரமத்தில் உள்ள பலரால் இந்த வருடம் தங்கம் வாங்க முடியாத நிலை உள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் தங்கம் கலந்த டீயை குடிப்பதற்கான விருப்பத்தை நாங்கள் வழங்குகிறோம் என்றார்.