UAE Tamil Web

துபாய்: பண்டிகைக்காலம் வந்துவிட்டது – மக்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட அரசு..!

Dubai Hotel

கொரோனா அலை அமீரகத்தில் மெல்ல அதன் வேகத்தைக் குறைத்திருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுலா போன்ற துறைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகின்றன. இருப்பினும் வரும் நாட்களில் ஹாலோவீன், தீபாவளி என விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் பொது மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துபாயின் தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச சபை நேற்று வெளியிட்டுள்ளது.

- Advertisment -

  • பொதுமக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற அரசு வெளியிட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மக்கள் பின்பற்றுதல் வேண்டும்.
  • வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் தனிநபர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றி அபராதத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளவும். உள்ளிட்ட விதிமுறைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.

சமூகத்தின் ஆரோக்கியமும் பாதுகாப்புமே மிக முக்கியமானவை. ஆகவே சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்போடு பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.