UAE Tamil Web

கோவிட்-19: மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கு பெறலாம்.! துபாய் வெளியிட்ட புதிய அறிவிப்பு.. யாரெல்லாம் பயன்படுத்தி கொள்ளலாம்.?

mask

அமீரகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், இதில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது ஃபேஸ் மாஸ்க் அணிவது.

- Advertisment -

இந்நிலையில் அமீரகத்தின் முக்கிய வணிக நகரான துபாயில் வசிப்போர் தற்போது முககவசங்கள் அணிவதிலிருந்து விலக்கு கோரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே நல்ல உடல்நிலை இருபவர்களாலேயே பொதுவெளிக்கு வரும் போது நீண்ட நேரம் மாஸ்க்கை அணிந்து கொள்ள இயலவில்லை. மாஸ்க் அணிந்து கொண்டிருக்கும் போது இயல்பாக இருக்கவும் முடிவதில்லை, சுவாசிப்பதிலும் சிரமங்களை எதிர் கொள்கிறோம்.

இதனிடையே மாஸ்க் அணிவதன் மூலம் மோசமடையக்கூடிய மருத்துவ நிலையில் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், இப்போது அதை அணிவதில் இருந்து விலக்கு பெறலாம். இது தொடர்பாக துபாய் ஊடக அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில உடல்நல சிரமங்களை(சில மருத்துவ நிலைமைகளை)கொண்டுள்ள குடியிருப்பாளர்கள், மாஸ்க் அணிவதை தவிர்ப்பதற்கான விலக்கு பெற www.dxbpermit.gov.ae/home என்ற வலைத்தளம் சென்று அதற்கான அனுமதியை பெற்று கொள்ளலாம் என்று DHA, துபாய் காவல்துறையுடன் இணைந்து அறிவித்துள்ளதாக கூறியுள்ளது. மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கு கோரி விண்ணப்பித்த 5 நாட்களுக்குள் விண்ணப்பம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த பிறகு, DHA-வின் பொது மருத்துவக் குழு அலுவலகம் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்யும். குடியிருப்பாளர்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாஸ்க் அணிவதால் மோசமடையக்கூடிய மருத்துவ சிக்கல்களால்(medical problems) பாதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ அறிக்கைகள் தவிர, சமர்ப்பிக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்களில் விண்ணப்பதாரரின் எமிரேட்ஸ் ஐடியும் அடங்கும்.

மாஸ்க் அணிவதிலிருந்தது யாரெல்லாம் விலக்கு கேட்கலாம்.?

  • பூஞ்சை தோல் அழற்சியால் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாக முகத்தில் ரத்தப்போக்கு, அரிப்பு மற்றும் தோல் செதிலாவது போன்ற கடுமையான அறிகுறிகள் கொண்டவர்கள்
  • மாஸ்க்கில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களால் ஏற்படும் அலர்ஜியால் தவிப்பவர்கள் அதாவதுஒவ்வாமை தோலழற்சி(allergic dermatitis), வெளிப்பொருட்களால் ஏற்படும் தொடர்பு தோலழற்சி(Contact dermatitis) மற்றும் தோல் வெடிப்பால் பாதிக்கப்படுபவர்கள்(Contact dermatitis)
  • வாய், மூக்கு அல்லது முகத்தை பாதிக்கும் கடுமையான ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் தொற்று(ஒருவகை புண்) உள்ளவர்கள்
  • கடுமையான மற்றும் கட்டுப்பாடற்ற நாள்பட்ட சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள்
  • கடுமையான ஆஸ்துமா நோயாளிகள்
  • மனம் மற்றும் உளவியல் ரீதியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

சில வகை மக்களுக்கு விலக்கு அளிப்பதற்கான இந்த முடிவு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான தங்களது நோக்கத்தின் ஒரு பகுதி என்று DHA குறிப்பிட்டுள்ளது.

மேலும் மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கு பெறுபவர்கள் அதை அணிவது கட்டாயமில்லை என்றாலும், தங்களையும் மற்றவர்களையும் தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்க முடிந்தவரை பொது இடங்களில் மாஸ்க் அணிந்தால் நன்மையே என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.