UAE Tamil Web

துபாய்: கோவிட் -19 பாதுகாப்பு விதிகளுக்கு இணங்காத விளையாட்டு நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை.!

sports

கொரோனா தொற்றுக்கு எதிராக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ள பாதுகாப்பு விதிகளை மீறும் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- Advertisment -

இந்நிலையில் துபாய் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் (DSC) மற்றும் துபாய் பொருளாதாரம் ஆகியவற்றின் ஆய்வுக் குழுக்கள், தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்க தவறியதற்காக 3 விளையாட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தன.

இது தொடர்பாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள துபாய் ஸ்போர்ட்ஸ் கவுன்சில், “கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறிய 3 விளையாட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதே காரணத்திற்காக 3 நிறுவனங்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாகவும்” கூறியுள்ளது.

முன்னதாக விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துபாய் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் கடந்த வாரம் நினைவூட்டல் பதிவு ஒன்றை வெளியிட்டது.

இதில் முகக்கவசங்களை அணிய வேண்டும், வெப்பநிலை சோதனைகள் செய்யப்பட வேண்டும், கைகுலுக்குவதை தவிர்த்தல் மற்றும் சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்டவை அடங்கும்