UAE Tamil Web

துபாய் இந்துக் கோவில்: மஹாசிவராத்திரி விழாவைக் காண்பது எப்படி?

SHIVA-TEMPLE

மார்ச் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), சிவனுக்கு உகந்த நாளான, மஹாசிவராத்திரி உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட இருக்கிறது. அன்று புர் துபாயில் உள்ள இந்துக் கோவிலில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி வைபவத்தைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என குருதர்பார் சிந்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது கோவிலானது காலையில் அரை மணிநேரமும், மாலையில் அரை மணிநேரமும் பூஜைக்காக திறக்கப்படுவதாக கோவில் கமிட்டி தெரிவித்துள்ளது.

வழக்கமான காலத்தில் மஹாசிவராத்திரி அன்று 50,000 முதல் 60,000 பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வருகை தருவார்கள். ” இந்த கொரோனா சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஒரே இடத்தில் கூட அனுமதிப்பது ஆபத்தான செயலாகும். கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்தாண்டு மஹாசிவராத்திரி பண்டிகைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் தரிசனம்

பக்தகோடிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே Hindu Temple Dubai என்னும் யூடியூப் சேனலில் தரிசனத்தை நேரலையில் காணலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.