புனித மாதமான ரமலானில் கடைபிடிக்கவேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை துபாய் வெளியிட்டுள்ளது. துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
- அதிக மக்களை ஒன்றிணைப்பது கூடாது. குறிப்பாக வயதான, நெடுநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்ட மற்றும் எளிதில் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்துகளை உடையவர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கக் கூடாது.
- ரமலான் டெண்ட், இஃப்தார் மற்றும் அன்பளிப்பு டெண்ட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- துபாயில் உள்ள மசூதிகளில் தராவீஹ் தொழுகையை நடத்தலாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கையாள்வது அவசியமாகும்.
- இஷா மற்றும் தராவீஹ் தொழுகை அதிகபட்சமாக 30 நிமிடங்களுக்குள் நடத்தப்படவேண்டும்.
- ரமலானின் கடைசி 10 நாட்களில் நடத்தப்படும் கியாம் உல் லைல் (Qiyam-ul-layl) தொழுகை நடைபெறுமா என்பது அப்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.