துபாய்: சுகாதாரத்துறையிடம் உரிமம் பெற்ற அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஒருநாள் அறுவை சிகிச்சை கிளினிக்குகள் பிப்ரவரி 19 ஆம் தேதிவரையில் அதிக முக்கியத்துவம் இல்லாத அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தேவைப்படின் இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியமாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என நிலையில் உள்ளவர்களுக்கு இதில் விலக்களிக்கப்பட்டுள்ளது.
يهدف القرار إلى إعطاء الأولوية للحالات الصحية المُلِحّة والأكثر أهمية ويسري فقط على العمليات الاختيارية التي تتطلب تخديراً عميقاً أو تخديراً كلياً، وسيسمح بالعمليات ذات الضرورة الطبية.
— Dubai Media Office (@DXBMediaOffice) January 21, 2021
நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை, இருதய மற்றும் கதிரியக்க அறுவை சிகிச்சை, சிறுநீர்க்குழாயில் கற்கள் மற்றும் ஸ்டெண்டுகளை அகற்றுதல், பொது அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகப்பேறியல் உள்ளிட்ட சிகிச்சைகள் (இவை மட்டுமல்ல) வழக்கம்போல மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வழக்குகளை அதிகளவில் கவனித்துக்கொள்ளவும் சுகாதார நிறுவனங்களை தயார்நிலையில் வைத்துக்கொள்ளவும் இந்தத் திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.