UAE Tamil Web

துபாய் உலக வர்த்தக மையத்தில் பார்வையாளர்களுக்காக கோவிட்-19 பரிசோதனை மையம்.! DHA ஏற்பாடு

dwtc

துபாய் உலக வர்த்தக மையத்தில் பார்வையாளர்களுக்கு கோவிட்-19 சோதனை வழங்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துபாய் சுகாதார ஆணைய (DHA) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மருத்துவ உதவி சேவைகள் மற்றும் நர்சிங் துறையின் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் ஃபரிதா அல் காஜா கூறியுள்ள தகவலில், துபாய் உலக வர்த்தக மையத்தில் (DWTC) நடத்தப்படும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கும் நிறுவன பிரதிநிதிகள், கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக இந்த சேவையை DHA வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். துபாய் முழுவதும் எளிதான மற்றும் அணுகக்கூடிய கோவிட்-19 சோதனை சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கான DHA முயற்சிகளுக்கேற்ப இந்நடவடிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர் முன்னதாக கடந்த செப்டம்பரில், DHA மூன்று புதிய கோவிட் -19 சோதனை மையங்களை ஏற்படுத்தியது. இந்த மையங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 550 சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை, அல் ரஷீதியா மஜ்லிஸ், அல் ஹம்ரியா போர்ட் மஜ்லிஸ் மற்றும் ஜுமேரா 1 போர்ட் மஜ்லிஸ் ஆகிய இடங்களில் இந்த சோதனை மையங்கள் உள்ளன என்றார்.

கோவிட்-19 PCR சோதனைகளை நடத்துவதில் துபாயின் திறன் ஒரு நாளைக்கு 80,000 என்ற அளவை எட்டியுள்ளது. இதில் பொது மற்றும் தனியார் துறை சேவை வழங்குநர்களும் உள்ளனர் என்று டாக்டர் அல் காஜா கூறினார்.

dwtc
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap