UAE Tamil Web

ஒரே வாரத்தில் பொதுமக்களிடம் இருந்து வந்த 1000 கொரோனா புகார்கள்: அதிர்ந்துபோன துபாய் காவல்துறை..!

Dubai Corona

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனமுடன் பின்பற்றவேண்டும் என துபாய் காவல்துறை பல்வேறு வழிகளில் முயன்றுவருகிறது. இதன் ஒருபகுதியாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் தேவையில்லாத சமூக நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் போன்ற கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள் மீது பொதுமக்களும் புகாரளிக்கலாம் என துபாய் காவல்துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது.

- Advertisment -

துபாய் காவல்துறையின் கால் செண்டருக்கு 901 என்ற எண் மூலமாகவோ அல்லது துபாய் காவல்துறை அப்ளிகேஷனின் Police Eye சேவை மூலமாகவோ பொதுமக்கள் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி கடந்த ஒருவாரத்தில் மட்டும் துபாய் காவல்துறைக்கு 1000 புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்திருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த சனிக்கிழமை வரையில் அவசரமில்லாத அழைப்பு எண்ணான 901 ற்கு 893 புகார்களும் Police Eye அப்ளிகேஷன் மூலமாக 82 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.