கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதால் பயணிகள் தங்களது பயணத்திற்கு 30 நிமிடம் முன்னதாக மெட்ரோ நிலையத்திற்கு வரும்படி துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா நோய்ப்பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுப் போக்குவரத்துத் துறையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்தல், டிரைன்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையால் மக்கள் காலதாமதத்தை சந்திக்கலாம் என ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஆகவே, பயணிகள் 30 நிமிடங்களுக்கு முன்னர் மெட்ரோ நிலையத்திற்கு வந்தால், பயணம் சுமூகமாக அமையும் என RTA வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Here are 3 tips for a successful @DubaiMetro trip:
Adhere to the safety precautions
Make sure to enter the right cabin
Reach the station 30 minutes before departure#RTA— RTA (@rta_dubai) February 22, 2021
மக்கள் பேருந்து அல்லது டிரைன்களில் பயணிக்கும் வேளையில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும் மற்றும் டிரைன்களுக்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் பாதுகாப்பான சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உசிதம் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பயணிகள் தங்களுக்கேற்ற டிரைன் பெட்டிகளை அறிந்து பயணம் மேற்கொள்வது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும் எனவும் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.